1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (08:34 IST)

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர் யார்?

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசியது பெரிய அளவில் கவனிக்கபட்டது. இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்கும் அதுபோல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது யாராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நிலையில் நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.