வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 1 மே 2020 (08:44 IST)

ஒரு கிலோ ரவாவில்… கொரோனா காலத்தில் பார்த்திபன் செய்தது இதுதான்!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி அதை அமேசானில் வெளியிட்டுள்ளார்.

எப்போதும் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்பவர் நடிகர் பார்த்திபன். அது படங்களின் கதையில் இருந்து அவர் கொடுக்கும் அழைப்பிதழ்கள் வரை தொடரும். இந்நிலையில் இப்போது ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கும் அவர் ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார்.

இதில் ஒரு கவிதையில்
‘நான் ஒரு கிலோ ரவாவில்
144,32,43,538 துகள்களை எண்ணினேன்….’ என பார்த்திபனின் குசும்பு மின்னுகிறது.

இந்த கவிதைத் தொகுப்பு பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பார்த்திபன்’ எனக்கு இந்த ஊரடங்கு சிறையாகத் தெரியவில்லை. நான் ஏற்கனவே இப்படி ஒரு வாழ்க்கையைதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்போது நான் தவற விடுகிற ஒரே விஷயம் ஜிம்முக்கு செல்வதைத்தான்’ எனக் கூறியுள்ளார்.