வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:04 IST)

இடுக்கி நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மம்மூட்டி!

கேரள மாநிலம் இடுக்கி அருகே கூட்டிக்கல் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 24 பேர் வரை பலியாகியுள்ளனர்.

கேரளாவின் மலையோர கிராமமான இடுக்கியில் உள்ள கூட்டிக்கல் என்ற பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 24 பேர் வலை பலியாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக நடிகர் மம்மூட்டி, தான் நடத்திவரும் கேர் & கேர் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக மருத்துவ உதவிகளையும் மருத்துவர்களையும் அனுப்பியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்.