ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Updated : புதன், 31 மே 2023 (18:36 IST)

ஒரு நாளைக்கு 4 லட்சம் தருவாங்க... ஆனால்... நடிகை ஷகிலா உருக்கம்!

மலையாள சினிமாவில் அரை நிர்வாண காட்சிகளில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. ஒருகட்டத்தில் கேரளாவில் ஷகிலாவின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு பிற நடிகர்களின் படங்களுக்கு இல்லாமல் போக, ஷகிலாவை கேரளாவின் அவமானமாக பிரச்சாரம் செய்து திரையுலகினர் அவரை கேரளாவிலிருந்து துரத்தினர்.
 
கவர்ச்சி ஆசிரியர், முண்டு உடுத்த டீக்கடை நாயரின் மனைவி போன்ற ஆபாச கதாபாத்திரங்களில் தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி வருகிறது. தெலுங்கிலும் இதேபோன்ற கதாபாத்திரங்களே ஷகிலாவுக்கு தரப்படுகின்றன. இதனிடையே வாய்ப்புகள் வறண்டு போன நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வேறு பிம்பத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்தார். 
 
தற்போது பிரபலங்களை வைத்து பேட்டி எடுக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஷகிலா, நான் பெரிய பணக்காரி போல் யூடியூப் சேனல்கள் சித்தரித்து வீடியோ வெளியிடுகிறார்கள்.அதாவது என்னிடம்  பிளாட் ,BMW காரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் நான் வாடகை வீட்டில் இருந்து வருகிறேன்.
 
அப்படியெல்லாம் ஒரு காலத்தில் இருந்தேன். அப்போது ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வாங்கினேன். ஆனால், என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா எடுத்து கொண்டார். இதெல்லாம் நான் மீண்டும் உழைத்து சம்பாதித்தது தான் என்று ஷகிலா உருக்கமாக கூறியுள்ளார்.