1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (11:44 IST)

பிரபல மலையாள நடிகர் குந்தாரா ஜானி மரணம்!

மலையாளத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் குந்தாரா ஜானி. இவர் 500க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.

தமிழிலும் நடிகன் மற்றும் கிரீடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 71. மலையாள திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.