வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (19:21 IST)

நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்று மாபெரும் பிரபலமடைந்தார். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிக்பாஸ் வாய்ப்பை பெற்றார்.

டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். அதன்பின்னர்.  நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின், லிப்ட் படத்தில் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில்  கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான படம் டாடா. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.20 கோடிக்கு மேல் வசூலானது.

தற்போது 2  புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு அடுத்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி திருமணம் ஆகவுள்ளது.

இவர், வீட்டில் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியான  நிலையில் அவர் தன் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொள்ளளவுள்ளார்.