வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (09:08 IST)

ராதிகா & கே எஸ் ரவிக்குமார் பங்கேற்கும் ஹீரோயின்களை அறிமுகப்படுத்தும் புதிய ரியாலிட்டி ஷோ…

விஜய் தொலைக்காட்சியில் இருந்து தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கிடைத்துள்ளனர். இப்போது புகழ் வெளிச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன், சந்தானம், இயக்குனர் நெல்சன் எனப் பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள்தான்.

இந்நிலையில் அப்படி தமிழ் சினிமாவுக்கு கதாநாயகிகளை அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு ரியாலிட்டி ஷோவை விஜய் தொலைக்காட்சி விரைவில் நடத்த உள்ளது.

இந்த ரியாலிட்டி ஷோவின் நடுவர்களான தமிழ் சினிமா பிரபலங்களான இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் நடிகர் ராதிகா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.