செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:28 IST)

1000 கோடி ரூபாய் வசூல் மகிழ்ச்சி… பதான் பட டிக்கெட் விலையைக் குறைத்த தயாரிப்பு நிறுவனம்!

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பதான் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2 மற்றும் டங்கல் ஆகிய படங்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இன்று ஒருநாள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டிப்ளக்ஸ்களில் பதான் படத்தின் டிக்கெட் 110 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.