திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 27 மே 2018 (12:44 IST)

எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை - நடிகர் கார்த்தி

தூத்துக்குடி கலவரத்தால் மக்கள் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் போது நான் பிறந்தநாள் கொண்டாட விரும்பவில்லை என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகரும் சிவக்குமாரின் இளைய மகனுமான கார்த்தி தமிழ் திரையுலகில் இதுவரை 15 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளராகவும் பதவி வகிக்கிறார்.
 
இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கார்த்தியின் பிறந்தநாளன்று, கார்த்தி தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் நெகிழச்செய்தது.
தூத்துக்குடியில் என் தமிழ் மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நேரத்தில் நான் பிறந்தநாள் கொண்டாடுவது சரியில்லை என கூறியுள்ளார். இதற்காக கார்த்திக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.