திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (16:14 IST)

ஆஷிரமத்து குழந்தைகளுடன் கௌதம் கார்த்திக் - வீடியோ!

மழலைகள் தரும் அன்பு பூமி பந்தின் தூய்மையின் ஓர் பகுதி. அதற்கு ஈடாக இந்த உலகில்  ஏதுமில்லை. ஆஷிரமத்து  மழலைகளுடன் கௌதம் கார்த்திக் உரையாடி குதூகலிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. வாழ்வின் சின்ன சின்ன விஷயங்கள் தரும் அனுபவம் அலாதியானது. ஆஷிரமத்து குழந்தைகளுடன் பழகிய அப்படியான  அனுபவம் குறித்து கௌதம் கார்த்திக் கூறியதாவது...
நான் இன்னும் அந்த சொர்க்கத்திலிருந்து மீளவில்லை. மழலைகளின் தூய்மையான அன்பில் குளித்தது வாழ்வின் வெகு உன்னதமான தருணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. எப்போதவது அமையும் ஒரு சில வாய்ப்புகளுள் ஒன்றாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சில திருமண நிகழ்வுகள், ரசிகர்களுடனான சந்திப்புக்காக மட்டுமே சென்ற போது ஆஷ்ரம் குழந்தைகளை சந்தித்தது எதிர்பாராத ஒரு நிகழ்வு.  ஆனால், இதில்  கிடைத்த அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை.அவர்கள் அளித்த உற்சாகமும் அழகான அன்பும் இந்த மொத்த பயணமும் எனக்கு வாழ்வில் முன் செல்ல பெரும் ஊக்கமும் புத்துணர்ச்சியும் அளித்திருக்கிறது. இப்பயணத்தை என்றும் மறக்க மாட்டேன் என மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.