செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 11 நவம்பர் 2023 (07:45 IST)

நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்… ரசிகர்கள் அஞ்சலி!

1983 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் கங்கா. அதை தொடர்ந்து கரையைத் தொடாத அலைகள் மற்றும் மீண்டும் சாவித்ரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை தொடர்களில் நடிக்க தொடங்கினார்.  திருமணம் செய்துகொள்ளாமல் தன்னுடைய சகோதரர் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த அவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார்.

அவருக்கு வயது 63. அவரின் உடல் சொந்த ஊரான சிதம்பரத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு திரை ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.