புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (20:54 IST)

அதிருதா… பதறுதா….டி.ராஜேந்தர் பாடிய ‘’மார்க் ஆண்டனி ‘’ பட பாடல் புரோமோ ரிலீஸ்

mark antony
நடிகர் விஷாலின் ‘’மார்க் ஆண்டனி’’ படத்தின் முதல் சிங்கில் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஷால், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டபில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த  நிலையில், ‘’மார்க் ஆண்டனி’’ படத்தின்  #AdhiridhuMaame ‘’அதிருது மாமே’’ என்ற முதல் சிங்கில் பாடலை  டி.ராஜேந்தர் பாடியுள்ள்ளார். இன்று இப்பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படம்  விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு     ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.