நாகார்ஜுனாவை இயக்கும் தனுஷ் பட டைட்டில் இதோ...!
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் நடிகர், பாடகர், தாயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். அத்துடன் ஹிந்தி , ஹாலிவுட் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து உலகம் முழுக்க பேமஸ் ஆன தென்னிந்திய நடிகராக பார்க்கமுடிகிறது.
பட்டாஸ் படத்திற்கு முன் வெளியான இவரது அசுரன் திரைப்படம் அசுர வெற்றி அடைந்து சாதனை படைத்ததுடன் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் ரிமேக் ஆகி வருகிறது. மேலும் சீன மொழியில் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளார் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனர் அவகாரமெடுத்த தனுஷ் தற்போது இரண்டாவது முறையாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை வைத்து புது படமொன்றை இயக்குகிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இதற்கு ‘ருத்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் எஸ்.ஜே. சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.