திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (21:37 IST)

ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் வருவது 10 நிடங்கள் தானா?

shiv rajkumar
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள ஜெயிலர்  படத்தில் சிவராஜ் குமார்  பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிககர் ரஜினிகாந்த். இவர்,   நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த   நிலையில்  ரஜினியுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல  நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தில், சிவராஜ்குமார் நடித்துள்ள காட்சிகள் 11 நிமிடங்கள் மட்டும்தான் என்று அவரே ஒரு யூடியூப் புரமோசனில் தெரிவித்துள்ளார்.