திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (14:19 IST)

இந்த வருஷம் புதுப்பேட்டை 2… அதிகாரப்பூர்வமாக அறிவித்த செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்களான என் ஜி கே மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்குபாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படம் ரிலீஸாகி கணிசமான கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் இப்போது அவர் சில படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு தன்னுடைய இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் மற்றும் சினேகா நடிப்பில் உருவான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான அவரது பதிவில் “இந்த ஆண்டு புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். இது தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.