1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (12:22 IST)

ஜாக்சன் துரையை மறக்க முடியுமா? நடிகர் சி.ஆர்.பார்த்திபன் காலமானார்!

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் பத்மினி, ஜெமினி கணேசன் உள்ளட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.
 
இந்த படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த பழம்பெரும் நடிகர் சி.ஆர் பார்த்திபன். இவர் சிவாஜியுடன் சரி நிகராக நின்று போட்டிபோடும் பிரிட்டிஷ் அதிகாரி ஜாக்சன் துரை கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். சுமார் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் இன்று  தனது 90வது வயதில் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தியடைய திரைபிரபலங்கள் அனைவரும் பிரார்த்தித்து வருகின்றனர்.