செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (19:28 IST)

பிரபல நடிகரின் மனைவி மரணம்: திரையுலகினர் இரங்கல்

bharath
பிரபல நடிகரின் மனைவி மரணம்: திரையுலகினர் இரங்கல்
பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரின் மனைவி காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த 90 களில் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பரத் கல்யாண். இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பரத் கல்யாண் தனது மனைவி மகன் மகளுடன் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் அவரது மனைவி பிரியா இன்று காலை உயிரிழந்தார் 
 
அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கோமாவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பரத் கல்யாண் மனைவி மரணத்தை அடுத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran