வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2022 (18:45 IST)

மனைவி மீது கொலை முயற்சி... சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் கைது !

kishore
மாடல் அழகியுடன் இருந்ததை தன் மனைவி பார்ததால், சினிமா தயாரிப்பாளர் கமல் மிஸ்ரா அவரது மனைவி  மீது கார் ஏற்றிக் கொல்ல முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மும்பையில், பிரபல சினிமா தயாரிப்பாள்ராக அறியப்படுபவர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர் சில நாட்களுக்கு முன், பிரபல மாடல் அழகியுடன்  ஒன்றாக குடியிருப்பில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதைப் பார்த்த அவரது மனைவியும்  நடிகையுமான யாஷ்மின் இதுபற்றி கிஷோரிடம் கேட்பதற்காக மேல் மாடியில் இருந்து கீழிறங்கி வந்துள்ளார். அப்போது, காரில் செல்ல முயற்ற கிஷோரை செல்ல விடாமல் தடுத்தார்.

ஆனால், அவர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்தார்,.  அவர் மீது கார் ஏறி இறங்கியது. இதில், யாஷ்மினுக்குக் காயம் ஏற்பட்டது.

அப்போது பணியில் இருந்த காவலாளி அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை நேற்றிரவு அவரைக் கைது செய்துள்ளனர்.
 
Edited by Sinoj