1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (12:45 IST)

ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரேநாளில் 12,000 பேர் பதிவு - வீடியோ

கரூரில் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக ஆன் லைனில் பதிவு முகாம்  நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். 
 
நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் அறிவித்தார்.  இதையடுத்து, தனது கட்சியில் அனைத்து தரப்பினரும் இணையும் வகையில், ஆன்லைனில் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  
 
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆர்பிஎஸ்ஐ (ரஜினிகாந்த் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார் பார் இண்டியா) என்ற அமைப்பினர் மாவட்டந்தோறும் சென்று ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, பெயர், செல்லிடப்பேசி எண்களை ரஜினி வெளியிட்ட இணையதள முகவரியில் பதிவு செய்து வருகின்றனர்.  
 
கரூரில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் பதிவு முகாம் மாவட்டத்தலைவர் கே.எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் கீதம் ரவி இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக பதிவு செய்தனர். தொடர்ந்து தாந்தோணி, குளித்தலை ஒன்றியப் பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மொத்தம் ஒரே நாளில் 12,000-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் உறுப்பினராகப் பதிவு செய்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 
சி.ஆனந்த குமார் - கரூர் செய்தியாளர்