1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (22:03 IST)

பணமோசடி புகார் எதிரொலி: போலீஸில் நேரில் ஆஜரான ஆர்யா!

நடிகர் ஆர்யா மீது இளம்பெண் ஒருவர் முறைகேடு பண மோசடி குறித்து புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் முன் நடிகர் ஆர்யா நேரில் ஆஜரானார் 
 
இலங்கையைச் சேர்ந்த வித்ஜா என்ற பெண்மணி தன்னை ஆர்யா திருமணம் செய்வதாக ஏமாற்றி 71 லட்சம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மன் அடிப்படையில் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்ததாக கூறப்படுகிறது
 
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நீதிமன்றத்தில் வரவிருக்கும் நிலையில் ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது