செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (23:09 IST)

ஷூட்டிங்கில் நடிகர் அருண் விஜய் காயம்!

arun vijay
நடிகர் அருண்விஜய்க்கு ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான படம் அச்சம் என்பது இல்லையே.

இப்படத்தை அடுத்து, மதராசப் பட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதையடுத்து, அவர் இயக்கிய தலைவி படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது,  அவர் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், அச்சம் என்பது இல்லையே என்ற படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது..

இப்பட ஷூட்டிங் கேரளாவில் நடந்து வந்த நிலையில்,அப்போது, அருண் விஜய்ய்க்கு காயம் எற்பட்டது.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில், காயம் ஏற்பட்ட என் முட்டிற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறேன் என்றும் இது நது 4 வது நாள் சிகிச்சை; விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.