வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:37 IST)

இயக்குனர் கௌதம் மேனனுக்கு இனிமேல் படம் இல்லை… சிம்பு எடுத்த திடீர் முடிவு!

சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது.

இது கௌதம் மேனன் சிம்பு கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக உருவானது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், இனிமேல் அவர் இயக்கத்தில் நடிக்கப் போவதில்லை என சிம்பு முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.