வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:42 IST)

த்ரிஷா சென்னை திரும்பவில்லை.. அம்மா உமா கிருஷ்ணன் பேட்டி..!

Trisha
விஜய் நடித்து வரும் லியோ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக காஷ்மீர் சென்ற த்ரிஷா திடீரென மூன்று நாளில் திரும்பி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 சென்னை விமான நிலையத்தில் த்ரிஷா இருந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாரா என்று கூறப்பட்டது. 
 
அதுமட்டுமின்றி காஷ்மீர் குளிர் த்ரிஷாவுக்க்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் அவர் திரும்பி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் த்ரிஷா அம்மா உமா கிருஷ்ணன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் த்ரிஷா சென்னை திரும்ப வில்லை என்றும் அவர் காஷ்மீரில் படப்பிடிப்பில் தான் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
Edited by Mahendran