திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (11:48 IST)

பொங்கல் தினத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்: வைரல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த ரசிகர்களுக்கு கையை அசைத்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்
 
தீபாவளி பொங்கல் உள்பட ஒவ்வொரு திருநாளின் போதும் ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன் குவிந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க தெரிவித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது 
 
அந்த வகையில் இன்று காலை முதலே ரஜினி வீட்டில் முன் ரசிகர்கள் குவிந்த நிலையில் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து கொண்டே ரசிகர்களுக்கு கையசைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது