திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (16:50 IST)

மாடல் அழகியை மிரட்டி ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

abuse
மாடல் அழகியை மிரட்டி ஆபாச படம் எடுத்த   நடிகர்  அனிருத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சார்க்கோப் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான பெண் மாடல் ஒருவருக்கு, வெப் சீரியல் தயாரிப்பாளர் யாஸ்மின் கான் என்பவருடன் அறிமுகமானது.

இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, ஒரு வீட்டில் ஷூட்டிங் நடத்தப்பட்டது, அப்போது, மாடல் அழகியின் ஆடைகளை களையும்படி கூறியுள்ளனர். இதற்கு மாடல் அழகி மறுத்துள்ளார்.

பின்னர் யஷ்மினும் நடிகர் அனியருத்தும் அவரிடம் சமாதானம் பேசி, இது வெளி நாட்டில் தான் ரிலீஸாகும் என்று கூறி அவரை நடிக்க வைத்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்த வெப் சீரீஸ் இணையதளத்தில் வெளியானதும் அவரது உறவினர்கள் இதுகுறித்து மாடல் அழகியிடம் கூறவே அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், மாடல் அழகி போலீஸில் புகாரளித்தார். இதையடுத்து,  அனிருத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj