'விடாமுயற்சி' பட ஷூட்டிங்கில் நடிகர் அர்ஜுன்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். துணிவு படத்தின் வெற்றிக்குப் பின்னர் மகிழ்திருமேனி படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வந்தது. இதில், அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர்.
இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வந்த நிலையில்,
விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு சமீபத்தில் அஜித் உள்ளிட்ட படக்குழு சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகிறது.
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், 2 வது கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள அஜித்குமார் அஜர்பைஜன் புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், மங்காத்தா படத்திற்குப் பின் அர்ஜூன், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இப்பட ஷூட்டிங் அஜித்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
அதேபோல் அஜர்பைஜானில் நடந்து வரும் ஷூட்டிங்கில் நடிகை திரிஷாவுடம் இணைந்துள்ளார். மங்காத்தா படத்தின் வவெற்ரிக்குப் பின் அஜித், அர்ஜூன், திரிஷா மூவரும் இணைந்துள்ள விடாமுயற்சி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.