1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actor arjun das aneethi movie streaming in ott

இரண்டு ஓடிடிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆன அர்ஜுன் தாஸீன் அநீதி திரைப்படம்!

அர்ஜுன் தாஸ்
இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய வெயில், அங்காடித் தெரு மற்றும் அரவாண் ஆகிய திரைப்படங்களுக்காக கவனம் பெற்றவர். சமீபத்தில் அவர் இயக்கிய ஜெயில் திரைப்படம் சரியாக போகாத நிலையில் இப்போது அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா ஆகியோர் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தை அவரே தயாரித்திருந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் மூலமாக ஜூலை 21 ஆம் தேதி வெளியிட்டார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அநீதி திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பிறகு ப்ரைம் வீடியோ மற்றும் ஆஹா தமிழ் ஆகிய இரண்டு ஓடிடிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ரசிக்ர்களுக்கு முத்தம் கொடுத்து போட்டோஷூட் நடத்திய சமந்தா!