1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (14:02 IST)

மீண்டும் ஹிரோவாக அர்ஜூன் தாஸ்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த அநீதி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. 
 
நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு திரைப்படத்தை விஷால் வெங்கட் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது. இயக்குனர் விஷால் வெங்கட் ஏற்கனவே சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தை இயக்கி உள்ளார் 
 
இந்த படத்தின் நாயகியாக சிவாத்மிகா நடிக்கவுள்ளார். டி இமான் இசையில் உருவாகும் இந்த படம் பின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மௌனகுரு மகாமுனி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி என்ற திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
 
Edited by Siva