வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (10:44 IST)

நான் நடிகை மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அக்கறையுள்ள குடிமகள்: கங்கனா ரனாவத்

நான் பாலிவுட் நட்சத்திர மட்டுமல்ல அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் பொறுப்புள்ள குடிமகள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார் 
 
நடிகை கடந்த சில மாதங்களாக நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய்ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது பெரும் சர்ச்சையாகிய நிலையில் ஒரு நடிகைக்கு எதற்காக ஒய் பிளஸ் பாதுகாப்பு என்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரனாவத், ‘ நான் பாலிவுட் நட்சத்திர மட்டுமல்ல, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அக்கறையுள்ள குடிமகள் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஒரு சிலர் ஒரு சிலரின் வன்மத்திற்கு தான் இலக்காக உள்ளதாகவும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்து கடுமையாக பேசியதால் எனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்றும் அதனால் தான் பாதுகாப்பு கேட்டேன் என்றும், இதில் தவறு இருக்கிறதா என்று கேள்வி என்று கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பி உள்ளார் 
 
இந்த நிலையில் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறு திரைப்படமான எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் கங்கனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran