1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Arjun das next movie with santhakumar title announced

சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘ரசவாதி’…!

மகாமுனி
மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களில் விருது வென்றது.

இந்நிலையில் இப்போது சாந்தகுமார் அடுத்து இயக்கும் படத்தில் கைதி புகழ் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ஜி எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் இந்த படத்துக்கு ‘ரசவாதி’ என்ற தலைப்பை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர்  சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் 40 வயது த்ரிஷா!