செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (07:30 IST)

மகாராஜா படத்தில் சிங்கம்புலி நடித்த கதாபாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது- நடிகர் அப்புக்குட்டி பகிர்ந்த தகவல்!

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு திரையரங்கில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

இந்த் படத்தில் நடிகர் சிங்கம் புலி ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் தோன்றி வந்த அவர் திடீரென இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களால் யூகிக்க முடியாததாக இருந்தது. அதனால் அந்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் தான்தான் நடிக்க இருந்ததாக நடிகர் அப்புக்குட்டி தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக இயக்குனர் அவரின் புகைப்படம் கேட்ட போது அவர் ஒல்லியாக இருந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதனால் அந்த கதாபாத்திரம் அதற்கு செட்டாகாது என்று இயக்குனர் நிராகரித்துவிட்டதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.