ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (07:48 IST)

மீண்டும் ஒரு நடிகையின் பயோபிக்.. இயக்குனராக அறிமுகமாகும் பிரபலம்!

இந்திய சினிமாவில் சமீபகாலமாக நிறைய பயோபிக் படங்கள் உருவாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர். அதிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகளவில் உருவாகின்றன.

அந்த வகையில் இப்போது இந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகையான மீனாகுமாரியின் பயோபிக்கை ஆடை வடிவமைப்பாலர் மனீஷ் மல்ஹோத்ரா இயக்க உள்ளார். இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  இந்த பயோபிக்கில் மீனா குமாரியாக க்ரீத்தி சனோன் நடிக்க உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனாகுமாரி, 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கனவு கன்னியாக வலம் வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவு காரணமாக தனது 38 ஆவது வயதிலேயே அவர் இயற்கை எய்தினார்.