வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (17:35 IST)

பாக்க பச்ச புள்ள மாதிரி இருந்துகிட்டு.. என்ன வேல பண்ற! – கமல் வெளியிட்ட அக்‌ஷரா பட ட்ரெய்லர்!

அக்‌ஷரா ஹாசன் நடித்து வெளியாகவிருக்கும் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடித்து இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. இந்த படத்தை ட்ரெண்ட் லௌட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் மால்குடி சுபா, உஷா உதுப், அஞ்சனா ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக்க பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் பெண்கள் எதை பேச வேண்டும்? எதை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி பேசுவதாக தெரிகிறது. இந்த படத்தின் ட்ரெய்லரை கமல்ஹாசன் தனது ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார்.