வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (12:49 IST)

பெண்களை காதலித்து கழட்டிவிடுவது எப்படி? ப்லே பாய் கவின் கொடுத்த அட்வைஸ்!

பிக்பாஸ் வீட்டில் பல பெண்களுக்கு ரூட்டு விட்டு  அதில் ஒருவரையும் காதலிக்காமல் அடுத்தடுத்து கழட்டி விட்டு ப்லே பாயாக சுற்றறிவரும் கவின் நடத்தைகள் பார்வையார்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

 
இதனாலே அவரை பாவாடை சாமி என பலரும் கிண்டலடித்து மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும்  லாஸ்லியா, சாக்ஷி, அபிராமி என அதனை போரையும் ஒரே நேரத்தில் வைத்து ஒட்டிக்கொண்டிருக்கிறார்.  
 
இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் காதலில் சொதப்புவது எப்படி என்று மோகன் வைத்யா கேட்க, காதலித்து விட்டு எஸ்கேப் ஆகணும் என்று முடிவு செய்துவிட்டால் அவங்க நம் மீது பழி போடும் முன்பு நாம் முந்திக் கொண்டு அந்த பழியை அவர்கள் மீது சுமதி விடவேண்டும். பின்னர் சேரன் கவினிடம், ஒரு காதலில் சொதப்புவது ஓகே, ஆனால் 2, 3 பேரை ஒரே நேரத்தில் காதலித்து சொதப்பினாயே அது எப்படி என்று கேட்டுள்ளார். 
 
பின்னர் அதற்கு பதிலளித்த கவின், 3 பெண்களையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு லவ் பண்ணக் கூடாது என்று கவின் கூறி அனைத்து சிங்கிள் பாய்ஸ் பசங்களையும் கடுப்பேற்றிவிட்டார்.  எனவே அபிராமி ... சாக்ஷியை அடுத்து கவின் தற்போது லொஸ்லியாவுக்கு ரூட்டு விட்டு வருகிறார் எனது மட்டும் தெள்ளத்தெளிவாக புரிகிறது. இதனால்  லொஸ்லியா ஆர்மிஸ் கவின் மீது செம்ம கடுப்பில் உள்ளனர்.