திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (18:30 IST)

இந்தியன் 2' படப்பிடிப்பு: ஷங்கரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் நாளை இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதை இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இதனையடுத்து ஷங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு போஸ்டரில் 'மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு? இந்தியன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போஸ்டரில் கமல்ஹாசனின் 'இந்தியன்' தாத்தா கேரக்டர் வித்தியாசமாக உள்ளது. இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது