செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (11:17 IST)

ஆரி-ஐஸ்வர்யா நடிக்கும் 'காதல் விஸ் காதல்'!

'60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர் எஸ்எஸ் ராஜமித்ரன். 
ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் இந்த 'காதல் vs காதல்' புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். 
 
A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.