வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:46 IST)

கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு; அசிங்கப்பட்ட காமெடி நடிகை

நகைச்சுவை நடிகைகளாலும் செக்ஸியாக இருக்க முடியும் என்று கூறி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்  வித்யுலேகா ராமன்.

 
தமிழ் சினிமா வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகை வித்யுலேகா. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார். இந்நிலையில் காமெடி நடிகை  வித்யுலேகாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
நடிகைகள் பலரும் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் வெளியிடுவதை வழக்கமாக  கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகை வித்யுலேகா ராமன் நகைச்சுவை செய்யும் நடிகையாக இருந்தால் உங்களால் செக்ஸியாக இருக்க முடியாது என்று மக்கள் நினைப்பார்கள். இது தான் நான், என்னாலும் முடியும் என்று கூறி கவர்ச்சிப்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். உடம்பைக் காட்டினால்தான் அழகா என ரசிகர் ஒருவர்  கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிலர் இப்டி ஒரு அழக காமெடி கேரக்டருக்கு பயன் படுத்திட்டானுகளே... என்றும், நடிகர் ஆர்யா, வித்யுமா ரொம்ப ஹாட் என்று ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.