3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!
டெல்லி மேயர் தேர்தலில் வெறும் மூன்று ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நேற்று மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் கிஷன்லால் மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மொத்தம் 265 வாக்குகள் பதிவான நிலையில், அதில் இரண்டு வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள வாக்குகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் 133 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கிஷன் பால் 130 வாக்குகளும் பெற்றனர். மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் மகேஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டெல்லி மாநகராட்சியை ஆள வேண்டும் என்று பாஜக மற்றும் ஆம் ஆத்மி கடுமையாக போட்டியில் இருந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு தலித் மேயர் டெல்லியை ஆட்சி செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மாநகராட்சி விதிகளின்படி, தற்போது பதவி ஏற்க இருக்கும் மேயர் மகேஷ் குமார் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே பதவியில் இருப்பார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மேயர் தேர்தல் நடைபெறும் என்பதும், சுழற்சி அடிப்படையில் மேயர்கள் மாற்றப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva