1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (17:28 IST)

ஓடாத கங்காருவை கல்லால் அடித்து கொலை செய்த பார்வையாளர்கள்!

சீனாவில் உள்ள புஜாவ் வனவிலங்கு பூங்காவில் கங்காரு ஒன்றை பார்வையாளர்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சீனாவில் உள்ள புஜாவ் வனவிலங்கு பூங்கா ஒன்றில் 12 வயது பெண் கங்காரு ஒன்று வளர்ந்து வந்தது. வனவிலங்கு பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் படுத்திருந்த கங்காரு மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த கங்காருவை ஊழியர்கள் மீட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.
 
ஆனால் கங்காரு உயிரிழந்துவிட்டது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றுள்ளது. இந்த செய்தி சீன செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. 
 
இந்த சம்பவம் நடந்து முடிந்த சில வாரங்களில் மற்றொரு 5 வயது கங்காரு மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த கங்காருவை ஊழியர்கள் காப்பாற்றி விட்டனர். 
 
கங்காரு துள்ளி குதித்து ஓடவில்லை என்ற காரணத்துக்காக அதன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் மோசமானது. கங்காரு துள்ளி குதித்து ஓடுவதை பார்க்க வேண்டும் என்றால் பார்வையாளர்கள் காத்திருக்க வேண்டும். இவர்கள் அவசரத்துக்கு அதை ஓட வைக்க கற்களை கொண்டு கொண்டு தாக்குவது மிருகதனமானது.