1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:18 IST)

லால் சிங் சத்தா படத்தின் மிகப்பெரிய குறையே நான்தான்… அமீர் கான் ஒப்புதல்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் சுமாராக இருந்தாலும், பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பரப்பப் பட்ட வெறுப்புப் பிரச்சாரமும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்த படம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான ‘பாரஸ்ட் ஹம்ப்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தியில் அந்த படம் படுதோல்வி அடைந்தது வியப்பை அளித்தது.

இந்நிலையில் லால் சிங் சத்தா படத்தின் தோல்வி குறித்து தற்போது பேசியுள்ள அமீர் கான் “லால் சிங் படத்தில் நாங்க செய்த தவறு என்னவென்றால் அது ஒரு மையநீரோட்டக் கதை அல்ல. அது நேர்கோட்டில் செல்லாமல் அத்தியாயம் அத்தியாயமாக செல்லும் கதை. படம் முடிவதற்கு 20 நிமிடத்துக்கு முன்பே கதாநாயகன் அவன் காதலியை திருமணம் முடித்ததுமே கதை முடிந்துவிட்டது. ஆனால் அதன் பிறகும் படம் செல்லும். இப்படிப்பட்ட கதையை வெகுமக்களிடம் கொண்டு செல்லவேண்டுமென்றால் நடிகரின் நடிப்பு வெகு அசாத்தியமானதாக இருந்திருக்க வேண்டும். டாம் ஹேங்ஸ் அதை சிறப்பாக செய்திருந்தார். ஆனால் நான் அந்தளவுக்கு நடிக்கவில்லை” எனப் பேசியுள்ளார்.