திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

செல்பி எடுக்க முயன்ற இளைஞரை சுற்றி வளைத்த ரஜினியின் நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார். அவருடன் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏற்கனவே செல்பி எடுக்க முயற்சிக்க கூடாது, காலில் விழக்கூடாது ரஜினியின் கையை பிடிக்க கூடாது போன்ற விதிமுறைகள் தெளிவாக கூறப்பட்டுள்ளது

இருப்பினும் பல ரசிகர்கள் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று வருகின்றனர். பலர் ரஜினியின் கையை பிடித்து கொண்டுதான் போஸ் கொடுக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரு இளைஞர் திடீரென தனது பையில் இருந்து மொபைல்போனை எடுத்து ரஜினியுடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் நான்கு பக்கங்களில் இருந்தும் பாய்ந்து வந்த ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அந்த இளைஞரை அப்படியே தள்ளிக்கொண்டு போய்விட்டனர். இதனால் வழக்கமாக எடுக்கப்படும் புகைப்படம் கூட அவரால் எடுக்க முடியாமல் போனது. இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.