1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (20:36 IST)

ரம்மி விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு பிச்சை எடுத்து பணம் அனுப்பும் தொழிலாளி!

iron man prakash kanoji
ரம்மி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பிச்சை எடுத்து பணம் அனுப்பி வருகிறார் சலவை தொழிலாளி.

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் பணத்தை இழந்து, விபரீதம் முடிவை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விளம்பரத்தில், சினிமாவில் நடித்து வரும் பிரபல நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்காமல் இருக்க வேண்டுமானால், அதற்கு பிரபலங்கள் மற்றும் சினிமா நடிகர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் நடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி பிரகாஷ் கனோஜி  தன் துணி அயனிங் நேரம் போக, மீதமுள்ள  நேரங்களில், இரு சக்கரவாகனத்தில் சென்று பிச்சை எடுத்து வருகிறார்.

சினிமாவின் நடிக்கும் நடிகர்கள் பிரபலங்கள் அதிகம் சம்பாதிக்கிறீர்கள். இருப்பினும் ஏன் இந்த விளம்பரத்தில் நடிக்கிறீர்கள்.. உங்களுக்கு வருமானம் பற்றாக்குறையாக இருந்தால் சொல்லுங்கள் நான் பிச்சை எடுத்து அனுப்புகிறேன் என்று கூறி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவெண்டும்ன் என்று கூறியுள்ளார்.

இவர், ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டத்தில் நடித்துள்ள அஜய் தேவ்கானுக்கு பிச்சை எடுத்த பணத்தை அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.