வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (16:48 IST)

ஓலா, உபேர் டிரைவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்...

பிரபல கால் டாக்ஸி நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் ஓட்டுனர்கள் நேற்று நள்ளிரவு முதல் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
 
ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்களிடம் மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என வாக்குறுதி செய்துள்ளன. ஆனால் ஓட்டுநர்களுக்கான லாபத்தை அளிப்பதில்லையாம். 
 
மேலும்,\ இரு நிறுவனங்களும் தாங்களே சொந்தமாக வைத்துள்ள டாக்ஸிகளுக்கே முன் உரிமை அளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், ஒப்பந்த முறையில் நிறுவனத்துடன் பணியாற்றும் கால் டாக்ஸிகள் பாதிக்கப்படுகின்றவாம். 
 
எனவே, டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தால் டாக்ஸி கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.