வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified சனி, 18 மார்ச் 2023 (08:00 IST)

“நாம் தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புகிறோம்…” ஏ ஆர் ரஹ்மான் கருத்து!

சமீபத்தில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு இந்த ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  இந்த நிலையில் ஆஸ்கர் விருது என்பது உலக அளவில் மதிப்பிற்குரிய ஒரு விருதாக கருதப்படும் நிலையில் இந்த விருதை பெற்றவர்கள் அதை விற்க முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுகள் பற்றிய சலசலப்பு இந்தியாவில் அதிகமாக எழுந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்கள் எதுவும் ஆஸ்கர் விருதை வென்றதில்லை. இதுபற்றி ஆஸ்கர் விருது பெற்றவரான ஏ ஆர் ரஹ்மான் இதுபற்றி பேசியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் “நாம் தவறான படங்களை ஆஸ்கர் விருதுக்கு அனுப்புகிறோம். அதனால்தான் நம் படங்கள் ஆஸ்கரை வெல்வதில்லை. நாம் மேற்கத்திய பார்வையில் இருந்து படங்களைத் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஆஸ்கர் விருது வெல்ல கலைத்தன்மை மட்டும் போதாது, பணம் கோடிக்கணக்கில் செலவு செய்து லாபி வேலைகள் செய்யவேண்டும் என்றொரு கருத்தும் பரவலாக சொல்லப்படுகிறது.