திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (09:48 IST)

இந்த நேரத்திலும் பாட்டு ப்ரமோஷனா? ஏ ஆர் ரஹ்மானை கண்டிக்கும் ரசிகர்கள்!

நேற்று முன்தினம் சென்னையில் தொடர்ந்து 30 மணிநேரத்துக்கும் மேலாக கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயல் இப்போது ஆந்திராவின் நெல்லூர் அருகே மையம் கொண்டுள்ளது. இன்று முற்பகல் நேரத்தில் புயல் முழுவதும் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முழுவதும் பெய்த பெருமழையால் சென்னையின் சில பகுதிகளில் 40 செமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் இப்பொழுது சென்னையில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் நிவாரணப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. ஆனாலும் சென்னையின் பல பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் வடியவில்லை. பம்புகள் வைத்து அவற்றை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை சமூகவலைதளம் மூலமாக ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தான் இசையமைத்திருக்கும் பிப்பா படத்தின் பாடலின் லிங்க் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த லிங்கின் கமெண்ட்டில் மக்கள் மிக்ஜாம் புயல் பாதிப்பால் அவதிப்படும் இந்த நேரத்திலும் பாடல் ப்ரமோஷன் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.