ஏ ஆர் ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவிற்கு மும்பையில் அறுவை சிகிச்சை!
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர் ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். அதில் “தங்களுக்குள் நிரப்ப முடியாத இடைவெளி விழுந்துவிட்டதாக” அவர் கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவாகரத்து முடிவை ஏ ஆர் ரஹ்மானும் ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து ஏ ஆர் ரஹ்மான் மீது சில அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் அவர் சிறந்த மனிதர் என்று சாய்ரா பானுவே அவருக்கு ஆதரவாகப் பேசினார்.
இந்நிலையில் தற்போது சாய்ரா பானுவிற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும், அவர் இப்போது நலமுடன் குணமாகி வருவதாகவும் அவரது வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் தனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நடைபெற்றது என்ன அறுவை சிகிச்சை என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.