திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 10 மே 2023 (17:56 IST)

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது புகார்

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா என்பவர் மீது கலைச்செல்வன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா என்பதும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர் என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்த நிலையில் சில மாதங்களில் மீண்டும் இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது கலைச்செல்வன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். நித்யாவிடம் கலைச்செல்வன் பணம் வாங்கி இருந்ததாகவும் அந்த பணத்தை கேட்டு அவருடைய வீட்டுக்கு சென்ற நித்யா அவரை தாக்கியதாகவும் கலைச்செல்வன் புகார் அளித்துள்ளார்.

அதே நேரத்தில் நித்யாவும் கலைச்செல்வன் மீது புகார் அளித்துள்ளார். இருவரும் மாறி மாறி புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva