வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (14:39 IST)

விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் நடிக்கணும்… ஆசையை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தை 100 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரிய அளவில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய சிவகார்த்திகேயன் “விஜய் தேவர்கொண்டாதான் பிரின்ஸ் போல வந்துள்ளார். அவருடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கணும். அவரின் வளர்ச்சி ராக்கெட் வேகத்திலானது” எனக் கூறியுள்ளார்.