வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (16:43 IST)

லைகர் தோல்வியால் சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் விஜய் தேவரகொண்டா!

லைகர் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு படுதோல்வி அடைந்துள்ளது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் பல கோடிக் கணக்கில் நஷ்டமடையக் கூடும் என சொல்லப்படுகிறது.

இதனால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்காக தன் சம்பளத்தில் இருந்து 6 கோடி ரூபாயை விஜய் தேவரகொண்டா விட்டுக்கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

லைகர் தோல்வியால் விஜய் தேவரகொண்டா- பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாக இருந்த JGM என்ற படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.