வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (22:47 IST)

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பரிசளித்த பிரபல நடிகர்!

Ar rahman -parthiban
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவருக்கு, பிரபல நடிகர் பார்த்திபன் ஒரு பரிசளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பார்த்திபன். இவர், நடிகர், வசன கர்த்தா,எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டனர்.

இவர், இயக்கத்தில் ஒத்த செருப்பு படத்திற்குப் பின், இயக்கி நடித்த படம் இரவின் நிழல்.  நான் லீனியர் திரைக்கதை முறையில் அமைந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் பியானோ வடிவிலான ஒரு பரிசை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அளித்துள்ளார்.

இதுகுறித்து பார்த்திபன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ஆன்மாவை அலங்கரிப்பது இசை.இசைப்புயலின் அலுவலக அலங்காரத்தில் என் பரிசும். மனதில் மகிழ்ச்சி tune ஆகிறது என்று தெரிவித்துள்ளார்.